செய்திகள்

மெஞ்ஞானபுரம் அருகே ஆட்டோ டிரைவருக்கு அரிவாள் வெட்டு

மெஞ்ஞானபுரம் அருகே ஆட்டோ டிரைவரை அரிவாள் வெட்டி விட்டு தப்பி ஓடிய மர்ம நபரை போலீசார் தேடி வருகிறார்கள்.

மாலை மலர்

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் அருகே உள்ள தாய்விளையை சேர்ந்தவர் சிவராஜன். ஆட்டோ டிரைவரான இவர் சம்பவத்தன்று அப்பகுதியில் ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே பைக்கில் வந்த மர்ம நபர் ஆட்டோ மீது மோதுவது போல் வந்தார். இதனால் இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டது.

இதில் ஆத்திரமடைந்த மர்ம நபர் அன்று மாலையில் சிவராஜனிடம் தகராறு செய்து சரமாரியாக தாக்கி அரிவாளால் வெட்டினார். மேலும் ஆட்டோவையும் சேதப்படுத்தி விட்டு தப்பி ஓடி விட்டார்.

இது குறித்த புகாரின் பேரில் மெஞ்ஞானபுரம் போலீசார் வழக்குப்பதிந்து சிவராஜனை அரிவாளால் வெட்டிய மர்ம நபர் யார்? என தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.