தா.பேட்டை:
தா.பேட்டை அடுத்த மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் தனியார் செங்கல் உற்பத்தி செய்யும் சூளை செயல்பட்டு வருகிறது. இங்கு விழுப்புரம் மாவட்டம் ரிஷிவந்தியம் பகுதியை சேர்ந்த நாராயணன் தனது குடும்பத்தினருடன் தங்கி கூலிவேலை செய்து வருகின்றார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் செங்கல் சூளையில் லோடு ஆட்டோ வண்டியை பின்னால் நகர்த்திய போது அங்கு விளையாடி கொண்டிருந்த நாராயணின் மகன் ரவி (2 வயது) சிறுவன் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த சிறுவன் ரவி மேட்டுப்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்க்கப்பட்டு, பின்னர் மேல்சிகிச்சைக்காக துறையூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர் சிறுவன் ரவி இறந்து விட்டதாக கூறினார்.
இது குறித்து நாராயணின் மனைவி சசிகலா தா.பேட்டை போலீசில் அளித்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) பத்மா வழக்குபதிவு செய்து லோடு ஆட்டோ டிரைவர் காசிவேல் (29) என்பவரை போலீசார் கைது செய்தனர்.