விபத்து 
செய்திகள்

தஞ்சை அருகே ஆட்டோ கவிழ்ந்து விபத்து- டிரைவர் உட்பட 3 வாலிபர்கள் காயம்

தஞ்சை அருகே டயர் கழன்று பள்ளத்தில் ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் டிரைவர் மற்றும் 3 வாலிபர்கள் லேசான காயத்துடன் உயிர் தப்பினர்.

வல்லம்:

தஞ்சை கரந்தை வளையல்கார தெருவை சேர்ந்தவர் ஆட்டோ டிரைவர் வீரையன் (வயது39). தஞ்சை மானோஜிப்பட்டி பகுதியை சேர்ந்த சுந்தரவிக்னேஷ் (20), லெட்சுமி நாராயணன்(20), விக்னேஷ்(23). இவர்கள் அனைவரும் உறவினர்கள் ஆவர்.

நேற்று தஞ்சை விளார் சாலையில் நடைபெற்ற இவர்களது உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விட்டு 4 பேரும் வல்லம் மருத்துவக்கல்லூரி சாலையில் உள்ள மூலிகை பண்ணை அருகே ஆட்டோவில் வந்தனர். ஆட்டோவை வீரையன் ஓட்டி வந்தார். அப்போது திடீரென ஆட்டோவின் இடதுபுற பின்பக்க டயர் கழன்றது.

இதில் நிலைதடுமாறிய ஆட்டோ சாலையில் இருந்த மரத்தில் மோதி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் ஆட்டோ கவிழ்ந்து 4 பேரும் ஆட்டோவில் மாட்டி கொண்டனர். இதனை கண்ட அந்த வழியாக வந்த சில வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கிய 4 பேரையும் மீட்டனர்.

இதில் ஆட்டோ டிரைவர் உட்பட 3 பேரும் படுகாயம் அடைந்தனர்.

SCROLL FOR NEXT