செய்திகள்

சிவகிரி அருகே குளத்தில் ஆட்டோ கவிழ்ந்து பள்ளி மாணவன் பலி

சிவகிரி அருகே சிவராத்திரிக்கு கோவிலில் வழிபட சென்றபோது எதிர்பாராமல் ஆட்டோ கவிழ்ந்து பள்ளி மாணவர் பலியானார்.

சிவகிரி:

சிவகிரி அருகே உள்ள பனையூர் வயலி கிராமத்தை சேர்ந்தவர் திருமலைக்குமார். இவரது மகன் கார்த்திக்(வயது13). இவன் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று இவன் அப்பகுதியை சேர்ந்த சிலருடன் சிவராத்திரி வழிப்பாட்டுக்காக அப்பகுதியில் உள்ள சிவாலயங்களுக்கு ஆட்டோவில் சென்றான்.

அவர்கள் சென்ற ஆட்டோ சிவகிரி அருகே உள்ள தென்மலை குளத்தில் வந்த போது எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறி குளத்துக்குள் பாய்ந்தது. இதில் கார்த்திக் உள்ளிட்ட 5 பேர் காயமடைந்தனர். பலத்த காயமடைந்த கார்த்திக் சிகிச்சைக்காக சிவகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டான்.

பின்பு அவர் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். அங்கு சிகிச்சை பலனின்றி கார்த்திக் பரிதாபமாக இறந்தான். இதுபற்றி சிவகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews

SCROLL FOR NEXT