திருப்பூர்:
தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு தமிழக மெட்ரிக் பள்ளி இயக்ககம் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது.
அதில் ஊரடங்கு தளர்வுக்கு பின் பெற்றோர்கள், மதிப்பெண் மற்றும் மாற்று சான்றிதழ் பெறுதல் உள்ளிட்ட காரணங்களுக்காக பள்ளிகளை நோக்கி வரத்தொடங்கியுள்ளனர்.
மேலும் மேல்நிலைப்பள்ளிகளில் மாணவர்களை சேர்த்து வருகின்றனர். இருப்பினும் பெரும்பாலான பள்ளிகள் முறையான கொரோனா தொற்று பாதுகாப்பு நடவடிக்கைகளை கடைபிடிப்பதில்லை என புகார் எழுந்துள்ளது.
எனவேமாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் அனைவரும் தனியார் பள்ளிகளுக்கு திடீர் ஆய்வு செய்து பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்பார்வையிட வேண்டுமென குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையடுத்து திருப்பூர் மாவட்டத்தில் மாவட்ட முதன்மை கல்விஅதிகாரிகள் ஒவ்வொரு பள்ளிக்கும் சென்று ஆய்வு பணியில் ஈடுபட உள்ளனர்.