டேவிட் வார்னர் 
செய்திகள்

பாகிஸ்தான் பந்து வீச்சாளர்கள் பரிதாபம்: டேவிட் வார்னர், லாபஸ்சாக்னே மீண்டும் சதம்- ஆஸி. 302/1

டேவிட் வார்னர், லாபஸ்சாக்னே மீண்டும் சதம் விளாச அடிலெய்டு பிங்க்-பால் டெஸ்டில் ஆஸ்திரேலியா முதல் நாளில் 1 விக்கெட் இழப்பிற்கு 302 ரன்கள் குவித்துள்ளது.

மாலை மலர்

டேவிட் வார்னர், ஜோ பேர்ன்ஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். ஜோ பேர்ன்ஸ் 4 ரன் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து டேவிட் வார்னர் உடன் லாபஸ்சாக்னே ஜோடி சேர்ந்தார்.

இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இருவரும் சிறப்பாக விளையாடி சதம் அடித்தனர். டேவிட் வார்னர் 150 ரன்னைக் கடந்தார். இன்றைய முதல் நாள் ஆட்டம் முடியும் வரை இருவரும் ஆட்டமிழக்கவில்லை.