செய்திகள்

அடிலெய்டு டெஸ்ட்: இந்திய கிரிக்கெட் அணியால் டிக்கெட் விற்பனை பாதிப்பு- தெற்கு ஆஸி. கிரிக்கெட் சங்கம்

இந்திய அணி அடிலெய்டில் ‘டே-நைட்’ போட்டியில் விளையாட மறுத்ததால் டிக்கெட் விற்பனை பாதித்துள்ளதாக தெற்கு ஆஸ்திரேலியா கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது. #AUSvIND

மாலை மலர்

இதற்கிடையில் பகல்-இரவு டெஸ்டாக மாற்றினால் வேலை முடிந்து ரசிகர்கள் மைதானத்திற்கு பெரிய அளவில் திரண்டு வரலாம் என்று ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் எண்ணியது. இதனால் ‘டே-நைட்’ டெஸ்ட் கிரிக்கெட்டை அறிமுகப்படுத்தியது. இந்த டெஸ்டை அடிலெய்டில் நடத்தியது. இதற்கு மைதானம் அமைந்துள்ள மாநிலத்தில் உள்ள ரசிகர்களிடம் அமோக வரவேற்பு கிடைத்தது.

இதனால் ஆஸ்திரேலியா செல்லும் வெளிநாட்டு அணிகளிடம் அடிலெய்டில் ‘டே-நைட்’ போட்டியில் விளையாட கோரிக்கை வைத்தது. நியூசிலாந்து போன்ற அணிகள் ஆஸ்திரேலியாவில் ‘டே-நைட்’ போட்டியில் விளையாடியது. தற்போது இந்தியா ஆஸ்திரேலியா சென்றுள்ளது.