பின்னர் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. அலஸ்டைர் குக்கின் அபார இரட்டை சதத்தால் நேற்றைய 3-வது நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து 9 விக்கெட் இழப்பிற்கு 491 ரனகள் குவித்திருந்தது. அலஸ்டைர் குக் 244 ரன்னுடனும், ஆண்டர்சன் 0 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
2-வது இன்னிங்சில் 40 ரன்கள் அடித்து அவுட்டாகாமல் இருக்கும் வார்னர்
இன்று 4-வது நாள் ஆட்டம் நடைபெற்றது. ஆட்டம் தொடங்கிய முதல் பந்திலேயே ஆண்டர்சன் ஆட்டம் இழந்தார். இதனால் இங்கிலாந்து 491 ரன்கள் குவித்து ஆல்அவுட் ஆனது.
முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 194 ரன்கள் முன்னிலைப் பெற்றது. 194 ரன்கள் பின்தங்கிய நிலையுடன் ஆஸ்திரேலியா 2-வது இன்னிங்சை தொடங்கியது. ஆஸ்திரேலியா 43.5 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 103 ரன்னாக இருக்கும்போது மழை பெய்தது. தொடர்ந்து கனமழை பெய்ததால் 4-வது நாள் ஆட்டம் அத்துடன் முடிவுக்கு வந்தது. வார்னர் 40 ரன்னுடனும், ஸ்மித் 25 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.
கவாஜாவை வீழ்த்திய சந்தோசத்தில் ஆண்டர்சன்