164 ரன்கள் பின்தங்கிய நிலையில் ஆஸ்திரேலியா 2-வது இன்னிங்சை தொடங்கியது. அப்போது வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் தனது விரல் நகத்தால் பந்தை சேதப்படுத்தியதாக உள்ளூர் ஊடகங்கள், மீடியாக்கள் செய்திகள் வெளியிட்டன. அத்துடன் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணைய தளமும் செய்தி வெளியிட்டது.
இதுகுறித்து போட்டியை நேரடியாக ஒளிப்பரப்பிக் கொண்டிருந்த சேனல்-9 டிவியில் நேரடியாக வர்ணனை செய்து கொண்டிருந்த முன்னாள் வீரர்கள் ஷேன் வார்னே, மைக்கேல் ஸ்லாட்ர், மைக் ஹசி ஆகியோர் விவாதித்துக் கொண்டிருந்தனர். ‘‘வீரர்கள் கை விரல் நகங்கள் பந்து மீது படுவதற்கு அனுமதிக்கப்படுமா? என்பது குறித்து என்னால் உறுதியாக சொல்ல முடியாது’’ என்று வார்னர் கூறினார். ஸ்லாட்டர் ‘‘பந்து மீது நகம் படக்கூடாது’’ என்றார். மைக் ஹசி ‘‘ஆண்டர்சன் நடுவரிடம் தனது செயல் குறித்து விளக்கம் கேட்கலாம்’’ என்றார்.