ஆஸ்திரேலியாவின் ஆளும்கட்சி கூட்டணியில் அங்கம் வகிக்கும் தேசிய கட்சியின் தலைவரும் துணை பிரதமருமான பர்னபி ஜாய்ஸ் தன்னிடம் ஊடக ஆலோசகராக பணிபுரிந்த விக்கி கேம்பியன் என்ற 33 வயது பெண்ணுடன் நெருக்கமாக பழகியதன் விளைவாக அந்தப் பெண் கர்ப்பமானார்.
இதையடுத்து, பொது வாழ்க்கையில் ஈடுபடுபவர்கள் தவறு செய்யக்கூடாது. அதனால் உயர் பதவிகளை வகிப்பவர்கள் தங்களுக்கு கீழ் பணிபுரியும் ஊழியர்களுடன் எவ்வித உறவும் வைத்துக்கொள்ள கூடாது என்ற புதிய சட்டத்தை இயற்ற வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர்கள் சார்பில் கோரிக்கை விடப்பட்டது. இந்த கோரிக்கைக்கு பிரதமர் மால்கோம் டர்ன்புல் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், தனது துணை பிரதமர் பதவியை ராஜினாமா செய்யப் போவதாக பர்னபி ஜாய்ஸ் இன்று அறிவித்துள்ளார்.