செய்திகள்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முகுருஜா அதிர்ச்சி தோல்வி

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் ஸ்பெயின் நாட்டை சேர்ந்த முகுருஜா 2-வது சுற்று ஆட்டத்தில் அதிர்ச்சிகரமாக தோற்று வெளியேறினார். #AUSOpen #AustralianOpen #Muguruza

மாலை மலர்

மெல்போர்ன்:

கிராண்ட்சிலாம் போட்டியில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்னில் நடைபெற்று வருகிறது.

இன்று காலை நடந்த பெண்கள் 2-வது சுற்று ஆட்டத்தில் 3-ம் நிலை வீராங்கனையான முகுருஜா (ஸ்பெயின்) அதிர்ச்சிகரமாக தோற்றார். சீன தைபேயை சேர்ந்த சுவி 7-6 (7-1), 6-4 என்ற நேர் செட் கணக்கில் முகுருஜாவை வீழ்த்தி 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.

21-ம் நிலை வீராங்கனையான கெர்பர் (ஜெர்மனி) 6-4, 6-1 என்ற நேர் செட் கணக்கில் குரோஷியாவை சேர்ந்த வேக்கியை தோற்கடித்தார்.

மரியா ‌ஷரபோவா (ரஷியா) 6-1, 7-6 (7-4) என்ற நேர் செட் கணக்கில் சுவெஸ்டாவை (லாத்வியா) வீழ்த்தி 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.

மற்ற ஆட்டங்களில் 6-ம் நிலை வீராங்கனை பிளிஸ்கோவா, சபரோவா (செக் குடியரசு), ஆகியோர் வெற்றி பெற்றனர்.

உலகின் 19-ம் நிலை வீரரான தாமஸ் பெர்டிச் (செக்குடியரசு) 6-3, 2-6, 6-2, 6-3 என்ற கணக்கில் கார்சியாலோசை (ஸ்பெயின்) வீழ்த்தினார். #AUSOpen #AustralianOpen #Muguruza