செய்திகள்

ஆஸ்திரேலியா ஓபன்: இரட்டையர் பிரிவில் போபண்ணா, திவிஜ் ஷரண் ஜோடி தோல்வி

ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் தொடரில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் போபண்ணா, திவிஜ் ஷரண் ஜோடி தோல்வியடைந்தது. #AUSOpen #RohanBopanna

மாலை மலர்

ஒரு ஆட்டத்தில் இந்தியாவின் ரோஹன் போபண்ணா, ஸ்பெயின் நாட்டின் எடோகார்டு ரோஜர்-வாஸ்லின் உடன் இணைந்து போர்ச்சுக்கலின் ஜோயவோ சோயுசா - அர்ஜென்டினாவின் லியானார்டோ மேயர் ஜோடியை எதிர்கொண்டது.

முதல் சுற்றில் போபண்ணா ஜோடி 4-6 என இழந்தது. 2-வது சுற்றில் சுதாரித்து விளையாடியது. ‘டை பிரேக்கர்’ வரை சென்ற இதை 7(7) - 6 (5) எனக் கைப்பற்றியது. ஆனால் 3-வது செட்டை 3-6 என இழந்து தொடரில் இருந்து வெளியேறியது.

மற்றொரு ஆட்டத்தில் இந்தியாவின் திவிஜ் ஷரண், அமெரிக்காவின் ராஜீவ் ராம் உடன் இணைந்து போலந்தின் லூகாஸ் குபோட் - பிரேசிலின் மார்சிலோ மெலோ ஜோடியை எதிர்கொண்டது.