ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்ன் நகரில் உள்ள மெல்போர்ன் பூங்கா மைதானத்தில் நடைபெற்று வருகிறது. நேற்று ஆண்களுக்கான மூன்றாவது சுற்று ஆட்டங்கள் நடைபெற்றன.
இதில் இரண்டாம்நிலை வீரரான ரோஜர் பெடரர், பிரான்சின் ரிச்சர்டு கேஸ்கெட்டை எதிர்கொண்டார். இப்போட்டியில், அதிரடியாக விளையாடிய பெடரர், 6-2, 7-5, 6-4 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு மூன்றாவது சுற்று ஆட்டத்தில் 14-வது நிலை வீரரான நோவக் ஜோகோவிக், ஸ்பெயினின் ரமோஸ் வினோலசை எதிர்த்து விளையாடினார். இதில், 6-2, 6-3, 6-3 என்ற நேர் செட்களில் ஜோகோவிக் வெற்றி பெற்றார்.
இதே பிரிவில் நடைபெற்ற மற்றொரு மூன்றாவது சுற்று போட்டியில் ஐந்தாம்நிலை வீரரான டோமினிக் தெயிம், பிரான்சின் அட்ரியன் மன்னரினோ ஆகியோர் மோதினர். இப்போட்டியில், 6-4, 6-2, 7-5 என்ற நேர் செட்களில் தெயிம் வெற்றி பெற்றார்.