செய்திகள்

ஆஸ்திரேலிய ஓபன்: முதல் சுற்றில் நம்பர் ஒன் வீரரை எதிர்கொள்கிறார் காஷ்யப்

ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்தியாவின் பாருபள்ளி காஷ்யப் முதல் சுற்றில் நம்பர் ஒன் வீரரான கொரியாவின் சன் வான் ஹோ-வை எதிர்கொள்கிறார்.

மாலை மலர்

முதல் சுற்றுக்கான தகுதிப் போட்டியில் பாருபள்ளி காஷ்யப், உலகின் முதல் தர வீரரான கொரியாவின் சன் வான் ஹோ-வை எதிர்கொள்கிறார். இந்தோனேசிய ஓபனை வெற்ற ஸ்ரீகாந்த் கிதாம்பி முதல் சுற்றில் சீனதைபே நாட்டைச் சேர்ந்த கான் சாயோ யு-வை எதிர்கொள்கிறார்.


சன் வான் ஹோ

இந்தோனேசிய ஓபனில் அரையிறுதியோடு வெளியேறிய எச்.எஸ். பிரண்ணாய், முதல் சுற்றில் இங்கிலாந்து வீரரை எதிர்கொள்கிறார்.

இளம் வீரர் சிரில் வர்மா முதன்மை சுற்றுக்கு முன்னேறியுள்ளார். பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் ரத்விகா ஷபானி ஆஸ்திரேலிய வீராங்கனைகளை வீழ்த்தி முதன்மை சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.