செய்திகள்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் பெடேனை சந்திக்கிறார், பெடரர்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் ரோஜர் பெடரர் தனது முதலாவது சுற்றில் 51-ம் நிலை வீரரான அல்ஜாஸ் பெடேனை எதிர்கொள்கிறார்.

ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் வருகிற 15-ந்தேதி தொடங்குகிறது. இந்த போட்டியில் யார்-யாருடன் மோதுவது என்பது நேற்று குலுக்கல் மூலம் (டிரா) நிர்ணயிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் நடப்பு சாம்பியன்கள் பங்கேற்பது வழக்கம். பெண்கள் பிரிவில் கடந்த ஆண்டு வாகை சூடிய செரீனா வில்லியம்ஸ் இந்த முறை விலகி விட்டதால், அவருக்கு பதிலாக முன்னாள் சாம்பியன் மரிய ஷரபோவாவும் (ரஷியா), ஆண்கள் பிரிவில் நடப்பு சாம்பியன் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரரும் ‘டிரா’ நிகழ்ச்சியில் கோப்பையுடன் உற்சாகமாக கலந்து கொண்டனர்.

உலக தரவரிசையில் 2-வது இடம் வகிக்கும் ரோஜர் பெடரர் தனது முதலாவது சுற்றில் 51-ம் நிலை வீரரான அல்ஜாஸ் பெடேனை (சுலோவேனியா) எதிர்கொள்கிறார். ‘நம்பர் ஒன்’ நட்சத்திரம் ஸ்பெயினின் ரபெல் நடால் தனது முதல் சவாலை விக்டர் எஸ்ட்ரிலா பர்கோசுடன் (டொமினிகன் குடியரசு) தொடங்குகிறார்.

SCROLL FOR NEXT