செய்திகள்

டாக்கா டெஸ்டிற்குப் பிறகு ஆஸி. எங்களுக்கு நல்ல மரியாதை கொடுப்பார்கள்: சாஹிப் அல் ஹசன்

டாக்கா டெஸ்டில் 20 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியதன் மூலம், இனிமேல் எங்களுக்கு நல்ல மரியாதை கொடுப்பார்கள் என சாஹிப் அல் ஹசன் கூறியுள்ளார்.

மாலை மலர்

இந்த வெற்றிக்கு ஆல்ரவுண்டர் முக்கிய காரணமாக இருந்தார். முதல் இன்னிங்சில் அரைசதம் அடித்ததுடன் இரண்டு இன்னிங்சிலும் தலா ஐந்து விக்கெட்டுக்கள் வீழ்த்தினார். இதனால் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

பின்னர், ஆஸ்திரேலியா வெற்றி குறித்து சாஹிப் அல் ஹசன் கூறுகையில் ‘‘கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியா மிகச்சிறந்தவர்கள். அவர்களிடம் இருந்து நாங்கள் கற்றுக் கொண்டிருக்கிறோம். இந்த போட்டிக்குப் பிறகு அவர்கள் எங்கள் மீது அதிக மரியாதை காட்டுவார்கள்.