செய்திகள்

இறுதிக்கட்டத்தில் அடிலெய்டு டெஸ்ட் - தோல்வியைத் தவிர்க்க ஆஸ்திரேலியா போராட்டம்

அலெய்டில் நடைபெற்று வரும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இறுதி நாளான இன்று 7 விக்கெட்டுகளை இழந்த ஆஸ்திரேலிய அணி தோல்வியை தவிர்க்க கடுமையாக போராடி வருகிறது. #INDvAUS #AdelaideTest

மாலை மலர்

ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான முதல் டெஸ்ட் அடிலெய்டில் நடைபெற்று வருகிறது. இந்தியா முதல் இன்னிங்சில் 250 ரன்களும், ஆஸ்திரேலியா 235 ரன்களும் சேர்த்தன. 15 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்தியா, 307 ரன்கள் குவித்து ஆல்அவுட் ஆனது. இதனால் ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு 323 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது.

323 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் 2வது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணியின் முன்னணி வீரர்கள்  விரைவில் விக்கெட்டை இழந்தனர். நிதானமாக ஆடிய ஷேன் மார்ஷ், டிராவிஸ் ஹெட் ஜோடி கவனமாக விளையாடிய நிலையில், 4ம் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா 4 விக்கெட் இழப்பிற்கு 104 ரன்கள் எடுத்திருந்தது. மார்ஷ் 31 ரன்னுடனும், ஹெட் 11 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.