செய்திகள்

டெஸ்ட் தரவரிசை: முதல் இடத்தில் இந்தியா நீடிப்பு; ஆஸ்திரேலியா 5-வது இடத்திற்கு சறுக்கல்

ஐ.சி.சி. டெஸ்ட் தர வரிசையில் இந்தியா முதல் இடத்தில் நீடிக்கிறது. ஆஸ்திரேலியா 4-வது இடத்தில் இருந்து ஐந்தாவது இடத்திற்கு சறுக்கியுள்ளது.

மாலை மலர்

இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-1 என ஆஸ்திரேலியா சமன் செய்ததால் 3 புள்ளிகளை இழந்து 97 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் இருந்து ஐந்தாவது இடத்திற்கு சறுக்கியுள்ளது.

இந்தியா 125 புள்ளிகளுடன் முதல் இடத்தில் நீடிக்கிறது. தென்ஆப்பிரிக்கா 110 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், இங்கிலாந்து 105 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் நியூசிலாந்து 97 புள்ளிகளுடன் 4-வது இடத்திலும் உள்ளது.