மற்றொரு ஆட்டத்தில் 5-ம் நிலை வீரரான கெவின் ஆண்டர்சன் (தென்ஆப்பிரிக்கா) 6-3, 5-7, 6-2, 6-1 என்ற கணக்கில் அட்ரியன் மனோரியாவை (பிரான்ஸ்) வீழ்த்தினார். டிமிட்ரோவ் (பல்கேரியா) வெர்ட்ஸ்கோவா (ஸ்பெயின்) ஆகியோர் முதல் சுற்றில் வென்று 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றனர்.
2008 சாம்பியனும், தரவரிசையில் 30-வது இடத்தில் இருப்பவருமான ரஷிய வீராங்கனை மரியா ஷரபோவா தொடக்க சுற்றில் இங்கிலாந்தை சேர்ந்த ஹேரியட் டார்ட்டை எதிர்கொண்டார். இதில் ஷரபோவா 6-0, 6-0 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வென்றார். 5-வது வரிசையில் இருப்பவரான ஸ்டீபன்ஸ் (அமெரிக்கா) 6-4, 6-2 என்ற நேர்செட் கணக்கில் சகநாட்டைச் சேர்ந்த டெய்லர் டவுன்சென்டை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.