இஸ்னெர் 
செய்திகள்

ஆஸ்திரேலிய ஓபன்: ஜான் இஸ்னெர், எட்மண்ட் முதல் சுற்றோடு வெளியேற்றம்

ஆஸ்திரேலிய ஓபனில் முன்னணி வீரர்களான ஜான் இஸ்னெர், எட்மண்ட் முதல் சுற்றோடு ஏமாற்றமடைந்து வெளியேறினார்கள். #AUSOpen

மாலை மலர்

இதில் இஸ்னெருக்கு ஒபெல்கா கடும் சவாலாக விளங்கினார். முதல் செட் ‘டை பிரேக்கர்’ வரை சென்றது. இறுதியில் ஒபெல்கா 7 (7) - 6(4) என முதல் செட்டை கைப்பற்றினார்.

2-வது செட்டிலும் இருவரும் 6-6 என சமநிலை பெற்றனர். இதனால் ‘டை பிரேக்கர்’ கடைபிடிக்கப்பட்டது. இறுதியில் ஒபெல்கா 7(8) - 6(6) என ஒபெல்கா கைப்பற்றினார்.


எட்மண்ட்

3-வது செட்டும் ‘டை பிரேக்கர்’ வரை சென்றது. ஆனால் இந்த முறை இஸ்னெர் (7)7 - 6(4) என 3-வது செட்டை கைப்பற்றினார். 4-வது செட்டும் ‘டை பிரேக்கர்’ வரை சென்றது. இறுதியில் ஒபெல்கா 7(7) - 6 (5) என கைப்பற்றினார்.

2 மணி நேரம் 58 நிமிடங்கள் போராடி இஸ்னெர் 6(4) - 7(7), 6(6) - 7(8), 7(7) - 6(4), 6(5) - 7(7) எனத் தோல்வியடைந்து முதல் சுற்றோடு வெளியேறினார்.