இன்று நான்கு போட்டிகள் நடைபெற்றன, ஒரு போட்டியில் 17-ம் வீரரான செர்பியாவின் ஜோகோவிச், கொரியாவின் ஹியியோன் சங்கை எதிர்கொண்டார். தரநிலை பெறாத கொரிய வீரர் சங், ஜோகோவிச்சுக்கு கடும் நெருக்கடி கொடுத்தார். ஜோகோவிச்சால் சங் ஆட்டத்திற்கு ஈடுகொடுக்க முடியவில்லை. இதனால் 3-0 என நேர்செட் கணக்கில் சங் வெற்றி பெற்றார். சங் 7(7) - 6(4), 7-4, 7(7) -6(3) என ஜோகோவிக்கை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.
மற்றொரு ஆட்டத்தில் 5-ம் நிலை வீரரான ஆஸ்திரியாவின் டொமினிக் தியம் அமெரிக்காவின் டெனிஸ் சான்ட்கிரென்-ஐ எதிர்கொண்டார். இந்த ஆட்டம் நீண்ட நேரம் சென்றது. ஐந்து செட் வரை நீண்டதில், தியம் 2-3 எனத் தோல்வியடைந்து வெளியேறினார். முதல் செட்டை 2-6 எனவும், 3-வது செட்டை 6(4) - 7(7) எனவும், கடைசி செட்டை 3-6 எனவும் இழந்தார். 2-வது செட்டை 6-4 எனவும், 4-வது செட்டை 7(9) - 6(7) எனவும் கைப்பற்றினார்.
3-வது ஆட்டத்தில் 2-ம் நிலை வீரரான ரோஜர் பெடரர், ஹங்கேரியின் மார்டன் புக்சோவிக்ஸ்-ஐ எதிர்கொண்டார். இதில் ரோஜர் பெடரர் 6-4, 7(7) - 6(3), 6-2 என வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.
கடைசி ஆட்டத்தில் 19-ம் நிலை வீரரான செக் குடியரசின் தாமஸ் பெர்டிச், 25-ம் நிலை வீரரான இத்தாலியின் பேபியோ போக்னினியை எதிர்கொண்டார். இதில் பெர்டிச் 6-1, 6-4, 6-4 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.