செய்திகள்

காயத்தில் இருந்து மீண்டு வந்த ஆரோன் பிஞ்ச் சதம் அடித்து அசத்தல்

இந்தியாவிற்கு எதிரான முதல் இரண்டு போட்டிகளில் களம் இறங்காத ஆரோன் பிஞ்ச், இன்றைய போட்டியில் சதம் அடித்து அசத்தியுள்ளார்.

வார்னர் உடன் தொடக்க வீரராக களம் இறங்கிய ஆரோன் பிஞ்ச் முதலில் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். பின்னர் செல்ல செல்ல அபாரமாக விளையாடினார்.

61 பந்தில் அரைசதம் அடித்த ஆரோன் பிஞ்ச், 34-வது ஓவரின் 2-வது பந்தை பவுண்டரிக்கு விளாசி சதம் அடித்தார். 110 பந்தில் 11 பவுண்டரி, 3 சிக்ருடன் சதத்தை கடந்தார்.