ஆத்தூர் அருகே பைத்தூர் ஊராட்சி மன்ற கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் கலைச்செல்வி தலைமை தாங்கினார். ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் அருள்பாரதி, துணைத்தலைவர் சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், கடந்த மார்ச், ஏப்ரல், மே, ஜூன் ஆகிய 4 மாதங்களுக்கு உண்டான வரவு, செலவு கணக்குகள் சரிபார்க்கப்பட்டன.
மேலும் ஊராட்சிகளில் குடிநீர் தட்டுப்பாடு உள்ள இடங்களில் ஆழ்துளை கிணறுகள் அமைக்க வேண்டும், என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதைத்தொடர்ந்து பைத்தூர் புதூர் கிராமத்தில் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என்று ஊராட்சி மன்ற உறுப்பினர் கொண்டு வந்த தீர்மானம் கூட்டத்தில் ரத்து செய்யப்பட்டது. குடிநீர் குழாய்கள், மின்மோட்டார்களை பழுதுநீக்கம் செய்த செலவினங்களை கூட்டத்தில் வைத்து ஒப்புதல் பெறப்பட்டது. இதில் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் 11 பேர் கலந்து கொண்டனர்.