செய்திகள்

ஆத்தூர் அருகே பைக் மீது வேன் மோதி பள்ளி மாணவன் படுகாயம்

ஆத்தூர் அருகே பைக் மீது வேன் மோதி பள்ளி மாணவன் படுகாயம் அடைந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

ஆறுமுகநேரி:

ஆத்தூர் அருகே உள்ள பழையகாயல் அன்னை தெரசா நகரை சேர்ந்த சேகர் மகன் கெரிஸ்டன் (வயது 18). மீன்பிடித் தொழில் செய்து வருகிறார். இவரது சித்தப்பா தாமஸ் என்பவரின் மகன் அபிஷேக் (15). இவர் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறான். சம்பவத்தன்று மாலை இருவரும் ஒரே பைக்கில் பழையகாயல் பஜாருக்கு சென்றுள்ளனர்.

இதையடுத்து அந்த வழியாக வந்த குடிநீர் வடிகால் வாரிய வேன், பைக் மீது மோதியது. இதில் பைக்கின் பின்னால் அமர்ந்திருந்த அபிஷேக் படுகாயம் அடைந்தான். உடனடியாக அவன் தூத்துக்குடி தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டான். இது பற்றி ஆத்தூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.