500 ரூபாய் நோட்டுகளை வீசி சென்றதால் பரபரப்பு 
செய்திகள்

ஆத்தூர் அருகே காரில் சென்றவர்கள் 500 ரூபாய் நோட்டுகளை வீசி சென்றதால் பரபரப்பு

ஆத்தூர் அருகே காரில் சென்றவர்கள் 500 ரூபாய் நோட்டுகளை வீசி சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

ஆத்தூர் அருகே சேலம்-சென்னை புறவழிச்சாலையில் குட்டம் பாறை என்ற இடத்தில் கள்ளக்குறிச்சியில் இருந்து சேலம் நோக்கி ஒரு வெள்ளை நிற கார் சென்றது. அப்போது காரின் பின்சீட்டில் அமர்ந்திருந்தவர் திடீரென காரின் கண்ணாடியை இறக்கிவிட்டு, 500 ரூபாய் நோட்டுகளை ரோட்டில் வீசி சென்றனர்.

அப்போது மோட்டார் சைக்கிள்களில் சென்றவர்கள், கொட்டம் பாறை பாலம் அருகே லாரியை நிறுத்திவிட்டு பழுது பார்த்துக் கொண்டு இருந்தவர்கள் இதைபார்த்து உற்சாகம் அடைந்தனர். உடனே அவர்கள் சாலையில் கிடந்த 500 ரூபாய் நோட்டுகளை எடுத்துச்சென்றனர். மேலும் அந்த கார் நிற்காமல் சேலம் நோக்கி வேகமாக சென்று விட்டது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.