கோப்புபடம் 
செய்திகள்

பீர் பாட்டிலால் தலையில் தாக்கி கார் டிரைவரை கொல்ல முயற்சி - 2 வாலிபர்கள் கைது

திருச்சி அருகே பீர் பாட்டிலால் தலையில் தாக்கி கார் டிரைவரை கொல்ல முயன்ற 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.

திருச்சி:

திருச்சி மலையப்பா நகரை சேர்ந்தவர் கார் டிரைவர் மாரிமுத்து(வயது 29). இவரை நேற்று முன்தினம் முன்விரோதம் காரணமாக அதே பகுதியை சேர்ந்த ரெங்கநாதன்(30), தனது நண்பர் ரமேசுடன்(25) சேர்ந்து அவதூறாக பேசியதுடன், அவரை கீழே தள்ளி பீர் பாட்டிலால் சரமாரியாக தலையில் தாக்கி கொலை செய்ய முயன்றதாக கூறப்படுகிறது. 

இதில் படுகாயம் அடைந்த மாரிமுத்து தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். புகாரின் பேரில் ரெங்கநாதன், ரமேஷ் ஆகியோரை அரியமங்கலம் போலீசார் கைது செய்தனர்.

SCROLL FOR NEXT