கீழ்பாக்கம் அரசு மருத்துவமனை 
செய்திகள்

கீழ்பாக்கம் ஆஸ்பத்திரியில் பெண் போலீஸ் மீது தாக்குதல்

கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் பெண் போலீஸ் மீது தாக்குதல் நடத்திய 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

சென்னை:

கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் நேற்று அவசர சிகிச்சை பிரிவுக்குள் ஒரு கும்பல் புகுந்தது. அவர்களை வெளியேறுமாறு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த பெண் போலீஸ் ஷீபா தட்டிக்கேட்டார். அப்போது அவர்கள் திடீரென ஷீபாவை சரமாரியாக தாக்கினர். பின்னர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

இதுதொடர்பான புகாரின் பேரில் வி.பி.சத்திரத்தை சேர்ந்த 3 பேரை போலீசார் தேடி வருகிறார்கள். இவர்கள் அ.தி.மு.க.வை சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.

SCROLL FOR NEXT