கொள்ளை முயற்சி நடந்த ஏடிஎம் 
செய்திகள்

திருவள்ளூர் அருகே ஏ.டி.எம்.மை உடைத்து கொள்ளை முயற்சி

திருவள்ளூர் அருகே ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

திருவள்ளூர்:

திருவள்ளூரை அடுத்த பன்னூர் கிராமத்தில் இந்தியன் வங்கியுடன் ஏ.டி.எம். மையமும் உள்ளது. நேற்று இரவு கொள்ளையர்கள் ஏ.டி.எம். மையத்துக்குள் புகுந்தனர். அவர்கள் ஏ.டி.எம். எந்திரத்தில் இருந்த வயர்களை துண்டித்தனர்.

உடனே வங்கி மேலாளர் வினோத் மற்றும் தலைமை அலுவலகத்துக்கு அவசர தகவல் சென்றது. மேலும் ஏ.டி.எம். மையத்தில் இருந்த அலாரமும் ஒலித்தது. இதனால் கொள்ளையர்கள் தப்பி ஓடிவிட்டனர். இது குறித்து மப்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

SCROLL FOR NEXT