கொள்ளை முயற்சி நடந்த ஏடிஎம் எந்திரத்தை படத்தில் காணலாம். 
செய்திகள்

தேன்கனிக்கோட்டை அருகே ஏடிஎம் உடைத்து கொள்ளை முயற்சி

தேன்கனிக்கோட்டை அருகே ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளையடிக்க முயன்ற ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாலை மலர்

தேன்கனிக்கோட்டை:

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே உள்ள இருதுகோட்டை கிராமத்தில் இந்தியா நம்பர் ஒன் ஏ.டி.எம். மையம் உள்ளது. இன்று அதிகாலை மர்ம நபர்கள் ஏ.டி.எம். மையத்திற்கு சென்று அங்குள்ள சி.சி.டி.வி. கேமரா உடைத்து விட்டு எந்திரத்தை இரும்பு கம்பியால் உடைக்க முயற்சித்துள்ளனர்.

அப்போது ஏ.டி.எம். எந்திரம் உடையாதால் கொள்ளையர்கள் திரும்பி சென்று விட்டனர். இன்று காலை பொதுமக்கள் ஏ.டி.எம். உடைந்து இருப்பதை கண்டு தேன்கனிக்கோட்டை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

அப்போது நள்ளிரவு மர்ம நபர்கள் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயற்சி செய்துள்ளனர். ஆனால் ஏ.டி.எம். எந்திரம் உடையாததால் அங்கிருந்து மர்ம நபர்கள் தப்பி சென்றுள்ளது தெரியவந்தது.

இதேபோல் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தேன்கனிக் கோட்டை பஸ் நிலையத்தில் ஒரு ஏ.டி.எம்.யை உடைத்து கொள்ளை முயற்சி நடந்தது குறிப்பிடத்தக்கது. ஏ.டி.எம்.களில் கொள்ளை முயற்சி தடுக்க போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபடவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.