கூடலூர்:
முல்லைபெரியாறு அணையில் இருந்து பாசனம் மற்றும் குடிநீருக்காக கூடுதல் தண்ணீர் திறக்கப்படுவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. தற்போது நீர்பிடிப்பு பகுதியிலும் மழை இல்லாததால் அணைக்கு நீர்வரத்து குறைந்துள்ளது. இதனால் முழுபோக பாசனத்திற்கும் தண்ணீர் கிடைக்குமா என விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
அணைக்கு 243 கனஅடிநீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 467 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. அணையின் நீர்மட்டம் 121.50 அடியாக குறைந்துள்ளது. தற்போது தென்மேற்கு பருவமழை முடிந்து ஓரிரு நாளில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இயல்பை விட அதிகளவு மழை பொழியும் என கணிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் மழையை எதிர்பார்த்துள்ளனர்.
வைகை அணைக்கும் நீர்வரத்து 250 கனஅடியாக குறைந்துள்ளது. 60 கனஅடி நீர் மதுரை மாநகர குடிநீருக்காக திறக்கப்படுகிறது. நீர்மட்டம் 53.58 அடியாக உள்ளது.
மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 50 அடியாக உள்ளது. 6 கனஅடி நீர்வருகிறது. 100 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. சோத்துப்பாறை அணை நீர்மட்டம் 118.40 அடியாக உள்ளது. வருகிற 30 கனஅடிநீர் அப்படியே திறக்கப்படுகிறது.
பெரியாறில் மட்டும் 2 மி.மீ மழையளவு பதிவாகியுள்ளது.