செய்திகள்

கொலம்பியா நாட்டில் கடும் நிலச்சரிவில் சிக்கி 4 பேர் பலி

கொலாம்பியா நாட்டில் நேற்று ஏற்பட்ட கடும் நிலச்சரிவில் சிக்கி நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 18-க்கும் அதிகமானோர் காணாமல் போயுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மாலை மலர்

தென் அமெரிக்கா நாடான கொலாம்பியாவில் உள்ள கவ்கா மாகாணத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக அப்பகுதியில் உள்ள நதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால், கொர்னிடோ நகரில் பொதுமக்கள் வசிப்பிடங்களில் நேற்று கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சிக்கி சுமார் 4 பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாக முதல் கட்ட விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த நிலச்சரிவில் 18க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர்களை பத்திரமாக மீட்கும் பணியில் மீட்புப்படையினர் ஈடுபட்டு வருகின்றனர். நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தை சுற்றி வசித்துவந்த 3000க்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.