செய்திகள்

ஆப்கானிஸ்தான் ராணுவ தளத்தின் மீது தலிபான் தாக்குதல் - 40 பேர் பலி

ஆப்கானிஸ்தானில் உள்ள ராணுவ தளத்தின் மீது தலிபான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 பேர் கொல்லப்பட்டனர். மேலும் பலர் படுகாயமடைந்தனர். #Talibanattack #Afghanistan

மாலை மலர்

காபுல்:

ஆப்கானிஸ்தானின் ஹெல்மண்ட் மாகாணத்தின் ஷொராப் பகுதியில் உள்ள ராணுவ முகாமில் தலிபான் பயங்கரவாதிகள் இன்று நுழைந்தனர். அவர்கள் அங்கிருந்தவர்களை நோக்கி தாக்குதல் நடத்தினர். அவர்களது தாக்குதலுக்கு ஆப்கானிஸ்தான் ராணுவத்தினரும் பதிலடி கொடுத்தனர்.

இந்த தாக்குதலில் ராணுவ தளத்தில் இருந்த 40 பேர் பரிதாபமாக பலியாகினர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர். 

தகவலறிந்து வந்த மீட்புக்குழுவினர் அங்கு விரைந்து சென்றனர். அவர்கள் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர். #Talibanattack #Afghanistan #tamilnews