செய்திகள்

காபுல்: ஆம்புலன்ஸ் குண்டு வெடிப்பில் 40 பேர் பலி

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் இன்று ஆம்புலன்ஸ் வாகனத்தில் இருந்த குண்டுகள் வெடித்து சிதறிய தீவிரவாத தாக்குதலில் 40 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். நூற்றுக்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்தனர்.#Afghanistan #kabulattack

காபுல்:

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுல் நகரின் மையப்பகுதியில் அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் பழைய அலுவலகத்தின் அருகே இன்று பயங்கரமான குண்டு வெடிப்பு சப்தம் கேட்டது.

ஆம்புலன்ஸ் வாகனத்தில் இருந்த குண்டுகளை வெடிக்கச்செய்து தலிபான் தீவிரவாதிகள் நடத்திய இந்த தாக்குதலில் 40 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். சுமார் 140 பேர் படுகாயம் அடைந்தனர் என ஆப்கானிஸ்தான் சுகாதாரத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் வாஹீத் மஜ்ரோ தெரிவித்துள்ளார்.

படுகாயமடைந்தவர்கள் அருகாமையில் உள்ள ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ள நிலையில் இந்த தாக்குதலில் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. #Afghanistan #kabulattack #tamilnews

SCROLL FOR NEXT