செய்திகள்

இந்தோனேசியாவில் பேருந்து விபத்தில் 27 பேர் பலி

இந்தோனேசியாவின் ஜாவா தீவுகளில் சுற்றுலாப்பயணிகளை ஏற்றி சென்ற பேருந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 27 பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. #Indonesia #Javabuscrash

ஜகார்த்தா:

இந்தோனேசியாவின் ஜாவா தீவுகளில் சுற்றுலாப்பயணிகளை ஏற்றி சென்ற பேருந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 27 பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தோனேசியாவின் ஜாவா தீவில் உள்ள சுபாங் பகுதியில் உள்ள மலப்பகுதியை சுற்றிப்பார்ப்பதற்காக சுமார் 40 பேர் கொண்டு ஒரு குழுவினர் பேருந்தில் சென்றுள்ளனர். அந்த பேருந்து மலையில் இருந்து இறங்கிக்கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக ஒரு மோட்டார் பைக்கின் மீது மோதியுள்ளது. 

இதனால் பேருந்தின் ஓட்டுனர் அவசரமாக பிரேக் போட்டுள்ளார். இதனால் கவிழ்ந்த பேருந்து பலமுறை உருண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 27 பேர் உயிரிழந்ததாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. #Indonesia #Javabuscrash

SCROLL FOR NEXT