செய்திகள்

ஜம்மு காஷ்மீர் பேருந்து கவிழ்ந்து விபத்து - பலி எண்ணிக்கை 17 ஆக அதிகரிப்பு

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பயணிகள் பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பலியானவர்களின் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது. #JammuKashmir #BusAccident

ஸ்ரீநகர்:

ஜம்மு காஷ்மீர் மாநிலம் கிஷ்ட்வார் மாவட்டத்தில் இன்று காலை பயணிகளை ஏற்றி வந்த சிறிய ரக பேருந்து ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து 300 அடி பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விழுந்தது.

இது குறித்து காவல்துறையினருக்கு உடனே தகவல் அளிக்கப்பட்டு மீட்பு பணிகள் துவங்கின். இந்த விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர் என முதல் கட்டமாக தகவல் வெளியானது.

இந்நிலையில், பேருந்து கவிழ்ந்து விழுந்த விபத்தில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது என மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இதே பகுதியில் கடந்த ஒரே மாதத்துக்குள் நடக்கும் 3-வது பெரிய விபத்து இது என்பது குறிப்பிடத்தக்கது. #JammuKashmir #BusAccident

SCROLL FOR NEXT