பற்றி எரியும் கூடாரங்கள் 
செய்திகள்

ரோகிங்கியா அகதிகள் முகாமில் பயங்கர தீ விபத்து -15 பேரின் சடலங்கள் மீட்பு

ரோகிங்கியா அகதிகள் முகாமில் ஏற்பட்ட தீ விபத்தில் ஆயிரக்கணக்கான கூடாரங்கள் தீயில் கருகின.

டாக்கா:

வங்கதேசத்தில் தெற்கு பகுதியில் உள்ள ரோங்கியா அகதிகள் முகாமில் நேற்று மாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதனால் முகாமில் உள்ள அகதிகள் அவசரம் அவசரமாக வெளியேற்றப்பட்டனர். எனினும் தீ மளமளவெனப் பரவியதால் ஏராளமானோர் முகாமை விட்டு வெளியேற முடியாமல் சிக்கிக்கொண்டனர்.

இரவு வெகுநேரம் வரை நீடித்த இந்த தீ விபத்தில் ஆயிரக்கணக்கான கூடாரங்கள் தியில் கருகின. தீயில் கருகிய கூடாரங்களில் இருந்து 15 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து மீட்பு பணி நடைபெறுகிறது.