அபுஜா :
ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் கடந்த 9 ஆண்டுகளாக போகோ ஹாரம் தீவிரவாதிகள் வன்முறை செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் தாக்குதல் நடத்தி இதுவரை பல்லாயிரம் பேரை கொன்று குவித்துள்ளனர்.
இந்நிலையில், நைஜீரியாவின் போரானோ மாகாணத்தில் உள்ள கிராமத்தினரை குறிவைத்து பயங்கர ஆயுதங்களுடன் போகோ ஹராம் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.
இதில், அப்பாவி பொதுமக்கள் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும், படுகாயம் அடைந்த பலர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என ராணுவம் தெரிவித்துள்ளது.