செய்திகள்

அசாமில் வெள்ள பாதிப்பு பகுதிகளை காங். துணை தலைவர் ராகுல் பார்வையிட்டார்

அசாம் மாநிலத்தில் வெள்ள பாதிப்பு பகுதிகளை காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி இன்று பார்வையிட்டார்.

மாலை மலர்

அசாம் மாநிலத்தில் கடந்த சில வாரங்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. லக்கிம்பூர், சச்சார், கரிம்கஞ்ச், சோனிட்பூர், நாகான் உள்பட 29 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. மொத்தம் 488 கிராமங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது.

அசாம் மழை வெள்ள பாதிப்புக்கு இதுவரை 80க்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும், வெள்ளத்தால் 25 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இந்நிலையில், அசாம் மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி இன்று பார்வையிட்டார். லக்கிம்பூர் மாவட்டத்துக்கு வந்த ராகுலை காங்கிரசார் வரவேற்று, வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு அழைத்துச் சென்றனர். நிவாரண முகாம்களில் தங்கி உள்ளவர்களை சந்தித்த ராகுல், அவர்களுக்கு ஆறுதல் கூறினார்.