செய்திகள்

அசாம்: வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட புலி குட்டியை மீட்ட இளைஞர்கள்

அசாம் மாநிலம் கம்ருப் மாவட்டத்தில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட புலிக் குட்டியை இளைஞர்கள் போராடி மீட்டனர்.

மாலை மலர்

குவாஹத்தி: 

அசாமில் பருவமழை காரணமாக மாநிலத்தில் பல்வேறு பகுதியில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது. நீர் நிலைகள், ஆறுகளில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. வெள்ளத்தில் பல்வேறு பொருட்கள், வனவிலங்குகள் அடித்துச் செல்லப்படுகிறது.

சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராமங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. 79 ஆயிரம் ஹெக்டார் அளவிலான விவசாய நிலங்களும் பாதிப்படைந்துள்ளது.

மழை, வெள்ளம் தொடர்பான விபத்துகளில் சிக்கி இதுவரை 52 பேர் உயிரிழந்துள்ளனர். மீட்பு பணிகளில் ரெயில்வே படை வீரர்களும் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதியில் இருந்து புலி குட்டி ஒன்று மீட்கப்பட்டது. கம்ருப் மாவட்டத்தின் நகர்பெரா பகுதியில் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட புலி குட்டியை உள்ளூர் மக்கள் காப்பற்றினர். மேலும் வெள்ளத்தில் சிக்கி பல்வேறு வனவிலங்குகள் தவித்து வருவது குறிப்பிடத்தக்கது.