கோப்புப்படம் 
செய்திகள்

உ.பி.யில் காருக்கான ஆவணங்களை கேட்ட போலீசாரை கடத்திய நபர்

நொய்டாவில் காருக்கான ஆவணங்களை கேட்டபோது, போக்குவரத்து போலீசாரை கடத்திச் சென்று கீழே தள்ளிவிட்ட நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

மாலை மலர்

உத்தர பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவின் கோதி பச்சேடா என்ற கிராமத்தில் வசித்து வருபவர் சச்சின் ராவல். இவர் இரண்டு வருடத்திற்கு முன் ஹரியானா மாநிலம் குர்கானில் உள்ள கார்  விற்பனை மையத்திற்கு சென்றுள்ளார். அங்கு மாருதி ஸ்விஃப்ட் டிசையர் காரை வாங்க வந்திருப்பதாகவும், அதை ஓட்டிப் பார்க்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

விற்பனை மையத்தில் உள்ள பிரதிநிதிகள், காரை ஓட்டிப்பார்தது பரிசோதிக்க அனுமதிக்க காரை எடுத்துச் சென்ற ராவல்,  அதன்பின் திரும்பி வரவில்லை. இதனால் ராவல் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

காரை எடுத்துச் சென்ற சச்சின் ராவல் பக்கத்து வீட்டில் வசிப்பவர் பயன்படுத்தும் கார் எண்ணைக் கொண்டு நம்பர் பிளேட் தயார் செய்து காரை பயன்படுத்தி வந்துள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை சுராஜ்பூரில் வாகன போக்குவரத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ராவல் காரை விரேந்த்ர சிங் என்ற போலீசார் மறித்து விசாரணை நடத்தியுள்ளார். அப்போது காருக்கான ஆர்.சி. புக் உள்ளிட்ட ஆவணங்களை கேட்டுள்ளார்.

ராவல் செல்போனில் உள்ள தகவல்களை காட்டியுள்ளார். ஆனால் விரேந்த்ர சிங் பேப்பர் ஆவணங்களை கேட்க, சிக்கிக் கொள்வோம் என்ற பயத்தில் விரேந்த்ர சிங்கை காருக்குள் தள்ளி, வேகமாக சென்றுள்ளார் ராவல். சுமார் 15 கிலோ மீட்டர் தூரம் சென்ற பிறகு, விரேந்த்ர சிங் கிழே தள்ளிவிட்டு சென்றுள்ளார்.

இதனால் ராவல் மீது போலீசார் கடத்தல், பணியில் இருந்த நபரை தாக்குதல் உள்ளிட்ட நான்கு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து ராவலை கைது செய்துள்ளனர்.

இரண்டு வருடங்கள் திருடிய காருடன் உலாவந்த ராவல், போலீசார் சோதனையின் போது மாட்டிக்கொண்டுள்ளார்.