ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி டெல்லியில் நேற்று தொடங்கியது. இன்று கிரேக்கோ-ரோமன் பிரிவின் 72 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரர் ஆதித்யா குந்து வெண்கல பதக்கத்திற்கான சுற்றில் ஜப்பானைச் சேர்ந்த பிராப்ளரை எதிர்கொண்டார்.
இதில் ஆதித்யா குந்து 8-0 என வெற்றி பெற்று வெண்கல பதக்கம் வென்றார். இந்த பதக்கத்துடன் இந்தியா நான்கு பதக்கங்களை வென்றுள்ளது.