ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடர் டெல்லியில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்களுக்கான 65 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் பஜ்ரங் புனியாவும், பெண்களுக்கான 58 கிலோ எடைப்பிரிவில் சரிதாவும் இறுதிப் போட்டிக்கு நுழைந்துள்ளனர்.

நேற்றைய போட்டியின்போது சாக்ஷி மாலிக், வினேஷ், ரிது ஆகியோர் பதக்கங்கள் வென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.