இந்தோனேசியாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் இன்று ஆடவருக்கான இரட்டையர் டென்னிஸ் போட்டிகள் நடைபெற்றன. இதில் இந்தியாவின் ரோகன் போபண்ணா- திவிஜ் சரண் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
இறுதிப்போட்டியில் ரோகன் போபண்ணா-திவிஜ் சரண் ஜோடி, கஜகஸ்தான் நாட்டின் பியூப்லிக்-யேவ்சயவ் ஜோடியை எதிர்கொண்டது. போட்டியின் துவக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய இந்திய ஜோடி, இறுதியில் 6-3, 6-4 என்ற செட்கணக்கில் வெற்றி பெற்று தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றது.