இந்திய அணி கடைசி ‘லீக்’ ஆட்டத்தில் தாய்லாந்தை இன்று சந்தித்தது. இன்று இந்திய வீராங்கனைகள் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். முதல் பாதி நேரம் வரை இரு அணி வீரர்களும் கோல் அடிக்கவில்லை. 37-வது நிமிடத்தில் இந்திய அணியின் ராணி முதல் கோலை பதிவு செய்தார். 46-வது நிமிடத்தில் மேலும் ஒரு கோல் அடித்தார்.
52-வது நிமிடத்தில் மோனிகாவும், 55-வது நிமிடத்தில் நவ்ஜோத் கவுரும், 56-வது நிமிடத்தில் ராணியும் கோல் அடிக்க இந்தியா 5-0 என வெற்றி பெற்றது. ராணி ஹாட்ரிக் கோல் அடித்தார்.