செய்திகள்

ஆசிய விளையாட்டு- கபடிப் போட்டியில் இந்திய பெண்கள் அணிக்கு வெள்ளிப் பதக்கம்

ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய பெண்கள் கபடி அணி, இறுதிப்போட்டியில் ஈரானிடம் தோல்வி அடைந்ததால் வெள்ளிப் பதக்கம் கிடைத்தது. #AsianGames2018 #IranianWomensKabaddi

மாலை மலர்

இந்தோனேசியாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய பெண்கள் அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. அரையிறுதியில் சீன தைபே அணியை 27-14 என்ற கணக்கில் வென்ற இந்திய அணி இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஈரானை எதிர்கொண்டது.

மிகவும் விறுவிறுப்பாக சென்ற இந்த போட்டியில் இந்திய அணி 24-27 என்ற கணக்கில் போராடி தோல்வி அடைந்தது. இதனால் இந்திய அணிக்கு வெள்ளிப்பதக்கம் கிடைத்தது.