செய்திகள்

ஆசிய விளையாட்டு- 200 மீட்டர் ஓட்டத்தில் டூட்டி சந்த் வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தல்

ஆசிய விளையாட்டுப் போட்டியில் இன்று பெண்களுக்கான 200 மீட்டர் ஓட்டத்தில் இந்திய வீரர் டூட்டி சந்த் வெள்ளிப் பதக்கம் வென்றார். #AsianGames2018 #DuteeChand

ஜகார்த்தா:

இந்தோனேசியாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுத் தொடரில், இன்று பெண்களுக்கான 800 மீட்டர் ஓட்டப்பந்தயம் நடைபெற்றது. இதில், சிறப்பாக விளையாடிய இந்திய வீராங்கனை டூட்டி சந்த் இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார். மாலையில் நடைபெற்ற இறுதிச் சுற்றில் இவர் பந்தய தூரத்தை 23.20 வினாடிகளில் கடந்து இரண்டாம் இடத்தைப் பிடித்தார். இதனால் அவருக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது. 

இப்போட்டியில் பஹ்ரைன் வீராங்கனை ஒடியாங் எடிடியாங் தங்கப் பதக்கமும் (22.96 வினாடி), சீனாவின் வெய் யோங்லி வெண்கலப் பதக்கமும் (23.27 வினாடி) வென்றனர். டூட்டி சந்த் முன்னதாக 100 மீட்டர் ஓட்டத்திலும் வெள்ளிப் பதக்கம் வென்றார். 

இந்த போட்டியின் முடிவில்,  இந்தியா 9 தங்கம், 20வெள்ளி, 23 வெண்கலம் என மொத்தம் 52 பதக்கங்களுடன் 9 இடத்தில் நீடிக்கிறது. #AsianGames2018 #DuteeChand

SCROLL FOR NEXT