செய்திகள்

ஆசிய போட்டியில் வெள்ளிப் பதக்கம்- இந்திய ஆண்கள் வில்வித்தை அணி அசத்தல்

ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய ஆண்கள் வில்வித்தை அணி, வெள்ளிப் பதக்கம் வென்றது. இதன்மூலம் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 43 ஆக உயர்ந்துள்ளது. #AsianGames2018 #IndianArcheryMen

இந்தோனேசியாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டித் தொடரில் இன்று வில்வித்தைப் பிரிவுகளுக்கான இறுதிச்சுற்று போட்டிகள் நடைபெற்றன. இதில் பெண்களுக்கான அணிகள் பிரிவில் இந்திய அணி, தென்கொரிய அணியிடம் தோல்வியடைந்து வெள்ளிப் பதக்கம் வென்றது.

அதன்பின்னர் நடைபெற்ற ஆண்கள் அணிகள் பிரிவு இறுதிச்சுற்றில் இந்தியாவும், தென் கொரியாவும் மோதின. போட்டியின் நிறைவில் இரு அணிகளும் தலா 229 புள்ளிகள்பெற்றதால் போட்டி டை ஆனது. இதையடுத்து ஷூட் ஆப் முறையில் இரு அணிகளுக்கும் ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டது. இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திய கொரிய அணி, வெற்றி பெற்று தங்கப் பதக்கத்தை தட்டிச்சென்றது. இந்திய அணிக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது. இந்திய அணியில் சவுகான் ரஜத், சைனி அமான், வர்மா அபிஷேக் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

SCROLL FOR NEXT