செய்திகள்

ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்ஸ்: 60 கிலோ எடைப்பிரிவில் சிவ தாபா இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்

ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்ஸ் தொடரில் மங்கோலிய வீரரை வீழ்த்தி இந்தியாவின் சிவ தாபா இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார்.

மாலை மலர்

ஆசிய சாம்பியன்ஷிப்ஸ் குத்துச்சண்டை தொடர் உஸ்பெகிஸ்தானில் உள்ள தஷ்கென்டில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற 60 கிலோ எடைப்பிரிவிற்கான அரையிறுதி போட்டி ஒன்றில் இந்த தொடருக்கான முதல்நிலை வீரரும், உலகின் 5-ம் நிலை வீரருமான மங்கோலியாவைச் சேர்ந்த ஒட்கொண்டாலை டோர்ஜ்நியாம்பு-வை இந்தியாவின் ஷிவ தாபா எதிர்கொண்டார்.

இதில் ஷிவ தபா, மங்கோலிய வீரரை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார்.