செய்திகள்

ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்: இந்திய மகளிர் அணியை வீழ்த்தியது ஜப்பான்

மலேசியாவில் நடைபெற்றுவரும் ஆசிய பேட்மிண்டன் அணிகள் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய மகளிர் அணியை 4-1 என வீழ்த்தி ஜப்பான் மகளிர் அணி வெற்றி பெற்றது. #AsianBadmintonChampionships #IndiaWomen

மாலை மலர்

அலோர்செடார்:

ஆசிய பேட்மிண்டன் அணிகள் சாம்பியன்ஷிப் போட்டிகள் மலேசியாவில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற பெண்கள் பிரிவு போட்டியில் இந்தியா மகளிர் அணியும், ஜப்பான் மகளிர் அணியும் மோதியது. 

முதல் ஒற்றையர் ஆட்டத்தில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து 21-19, 21-15 என்ற நேர்செட்டில் அகானே யமகுச்சியை (ஜப்பான்) தோற்கடித்தார். 

இரண்டாவது ஒற்றையர் ஆட்டத்தில் இந்திய வீராங்கனை கிருஷ்ணபிரியா, ஜப்பானின் சட்டோ சயாகாவிடம் 21-12, 21-12 என்ற நேர் செட்களில் தோல்வியடைந்தார்.

மற்றொரு ஒற்றையர் ஆட்டத்தில் ஜப்பானின் அயா ஒகோரி, இந்திய வீராங்கனை அஷ்வினி போபண்ணாவை 21-14, 21-12 என்ற நேர் செட்களில் தோற்கடித்தார்.

முதல் இரட்டையர் ஆட்டத்தில் இந்தியாவின் சன்யோகிதா கோர்பாடே, பிரஜக்தா சவாந்த் ஜோடியும், ஜப்பானின் கொஹரு யொனிமோடோ, ஷிஹோ தனகா ஜோடியும் மோதியது. இதில் 21-17, 21-17 என்ற நேர் செட்களில் ஜப்பான் ஜோடி வெற்றி பெற்றது.

மற்றொரு இரட்டையர் ஆட்டத்தில் அஷ்வினி போபண்ணா, சிக்கி ரெட்டி ஜோடி, 21-18, 21-18 என்ற நேர் செட்களில் ஜப்பானின் மிசாகி மட்சுடோமோ, அயாகா தகாஹஷி ஜோடியிடம் வீழ்ந்தது.  

இதன்மூலம் 4-1 என்ற புள்ளிக்கணக்கில் ஜப்பான் அணி வெற்றி பெற்றது. தோல்வியடைந்த போதிலும் இந்திய அணி புள்ளி அடிப்படையில் காலிறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இன்று நடைபெற உள்ள ஆண்கள் பிரிவு போட்டியில் இந்திய அணி, இந்தோனேசியாவை எதிர்கொள்ள உள்ளது. #AsianBadmintonChampionships #IndiaWomen