செய்திகள்

800 மீட்டர் ஓட்டப்பந்தயம்: இந்திய வீராங்கனை அர்ச்சனா ஆதவ் தங்கம் வென்றார்

புவனேஸ்வரில் நடைபெற்று வரும் ஆசிய தடகள சாம்பியன்ஷிப்பின் 800 மீட்டர் ஓட்டத்தில் இந்தியாவின் அர்ச்சனா ஆதவ் தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.

மாலை மலர்


புவனேஸ்வர்:

ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் நகரில் 22-வது ஆசிய சாம்பியன்ஷிப் தடகள போட்டி நடைபெற்று வருகிறது. போட்டியின் கடைசி நாளான இன்று பெண்களுக்கான 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தின் இறுதிப் போட்டி நடைபெற்றது. இப்போட்டிக்கு தகுதி சுற்று முடிவின் அடிப்படையில் இந்தியாவின் அர்ச்சனா ஆதவ், லில்லி தாஸ் மற்றும் டின்டு லுகா ஆகியோர் தகுதி பெற்றனர்.

இப்போட்டியில் அர்ச்சனா ஆதவ் 2 நிமிடம் 5 வினாடிகளில் பந்தைய தூரத்தை கடந்து தங்கப்பதக்கம் வென்றார். இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தை இலங்கை வீராங்கனைகள் தட்டிச்சென்றனர். லில்லி தாஸ் ஐந்தாவது இடத்தையே பிடித்தார்.

ஆண்களுக்கான 800 மீட்டர் ஓட்டத்தில் இந்தியாவின் ஜின்சன் ஜான்சன் வெண்கலப்பதக்கம் வென்றுள்ளார். பெண்களுக்கான 800 மீட்டர் ஹெப்டாதலான் ஓட்டத்தில் இந்தியாவின் லிக்ஸி ஜோசப் வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார். இப்போட்டியில் ஜப்பான் வீராங்கனை தங்கம் வென்றார்.